அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்தது.
அத்தோடு, மேல் மாகாணத்தை மையப்படுத்தி இன்றும் (29) நாளையும் (30) இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாக முன்னர், அனைத்து மாவட்டங்களிலும், டெங்கொழிப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் கடந்த சில மாதங்களில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக, விசேட வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.
No comments:
Post a Comment