காதி நீதிபதிகளின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை - முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 29, 2019

காதி நீதிபதிகளின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை - முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம்

முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் பெண் காதி நீதி­ப­திகள் நிய­மனம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ரணை முன்வைக்கப்­பட்டால் திருத்­தங்கள் மேற்­கொள்­ள­ வேண்­டி­வரும். அத்­துடன் காதி நீதி­ப­தி­களின் தரத்தை உயர்த்த நட­வ­டிக்கை எடுத்தி­ருக்­கின்­றோ­மென்று தபால் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

முஸ்லிம் விவாக விவாக­ரத்து திருத்த சட்­ட­மூ­லத்தில் பெண் காதி நீதி­ப­திகள் நிய­மிப்­பது தொடர்பில் திருத்தம் மேற்­கொள்­ளப்­ப­டாமை தொடர்பில் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், முஸ்லிம் விவாக விவா­க­ரத்து திருத்தச் சட்­ட­மூலம் தொடர்­பான அமைச்சரவை பத்­தி­ரத்­துக்கு கடந்த 20ஆம் திகதி அமைச்­ச­ரவை அனு­மதி கிடைத்­தது. 

குறித்த சட்ட மூலத்தில் சர்ச்­சை­யாக இருந்த சில விட­யங்­களில் திருத்­தங்­களை மேற்­கொண்­டி­ருந்தோம். குறிப்பாக பெண்­களின் திரு­மண வயது 18ஆக இருக்­க­வேண்டும் என்றும் திரு­மணப் பதிவின்­போது பெண்ணின் அனு­மதி பெறப்படவேண்டும் போன்ற திருத்­தங்­களை மேற்கொண்டிருக்கின்றோம்.

அத்­துடன் காதி நீதி­ப­திகள் நிய­ம­னத்தில் பெண்­களும் உள்ளடக்கப்ப­ட­வேண்டும் என்ற கோரிக்­கையும் ஒரு­சி­லரால் முன்வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இருந்­த­போதும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இதற்கு அனு­ம­திக்க மறுத்­தி­ருந்­தது. அதனால் பெண் காதி நீதி­பதி நிய­மனம் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ளப்ப­ட­வில்லை. என்­றாலும் காதி நீதி­ப­தி­களை நியமிக்கும்­போது அவர்­களின் தரத்தை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்றோம்.

கடந்த காலங்­களில் மெள­ல­வி­மார்கள் மாத்­தி­ரமே காதி நீதிபதிகளாக நிய­மிக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றனர். அதனால் காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்கள் சட்ட அறிவும் பெற்றிருக்­க­வேண்­டு­மென அதன் தரத்தை உயர்த்த நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்றோம். 

அத்­துடன் காதி நீதி­ப­தி­க­ளுக்குப் போது­மான சம்­பள முறைமையொன்று இருக்­க­வில்லை. அதனால் அவர்கள் பகுதி நேர அடிப்­ப­டை­யிலே இந்த தொழிலை செய்­து­வந்­தார்கள். இதன் பின்னர் காதி நீதி­ப­திகள் முழு­நேர அடிப்­ப­டையில் செயற்­படும் வகையில் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. அவர்களுக்குப் போது­மான சம்­பள அதி­க­ரிப்பும் மேற்­கொள்­ளப்­படும்.

மேலும், பெண் காதி நீதி­ப­திகள் நிய­மனம் தொடர்பில் சட்­டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. இருந்தபோதும் இதுதொடர்பில் யாராவது பாராளுமன்றத்துக்கு பிரேரணை ஒன்றை கொண்டுவந்து, அது அங்கீகரிக்கப்படுமானால், பெண் காதி நீதிபதிகள் நியமிக்கப்படும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்றார்.

எம்.ஆர்.எம்.வஸீம்
vidivelli

No comments:

Post a Comment