பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவிடம் 09 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேக தெரிவித்தார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில், குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் (CID) மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நேற்று (15) முற்பகல் 10.00 மணியிலிருந்து மாலை 7.00 மணி வரையான 9 மணித்தியாலங்கள் வரை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவிடம் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment