பிலியந்தலை, ஹெதிகம, பிரதேசத்தில் 290 மின்சார டெட்டனேட்டர்களுடன் தந்தை மற்றும் மகன்கள் இருவருடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (15) மாலை நேரம் பிலியந்தலை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, ஹெதிகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இராணுவத்தினருடன் மேற்கொண்ட சோதனையின்போது குறித்த வீட்டிலிருந்து 290 மின்சார டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதனையடுத்து, வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது இரு மகன்கள் மற்றும் குறித்த டெட்டனேட்டர்களை கொண்டு வந்து வழங்கிய நபர் ஆகிய நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர். கைதான நால்வரையும் 3 நாள் தடுப்பு உத்தரவுக்கமைய, விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிசில் சரணடைந்த மற்றுமொரு சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிலியந்தலை, ஹெடிகம, பஹலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த டன்ஸ்டன் பெரேரா (59), அவரது புதல்வர்களான, முதித்த பெரேரா (25), கவிந்து பெரேரா (22), பிலியந்தலை, ஹெடிகம, ஜயமாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த ஜனக (36) ஆகியோர் நேற்றைய தினமும் (15) கொட்டதெனியாவ, எரபத்த பிரதேசத்தைச் சேர்ந்த செனவிரத்ன பண்டா (43) என்பவர் இன்றைய தினம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment