முன்னாள் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும், முஸலிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா அவர்களது முயற்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் இருந்தும் 27,321 புதிய பயனாளிகள் சமுர்த்தி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதற்கான பிரதான நிகழ்வு கடந்த 13ஆம் திகதி அமைச்சர் தயா கமகே அவர்களது பங்கேற்புடன் ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பிரதேச ரீதியாக மக்களின் கரங்களில் சமுர்த்தி உரித்துப் பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது பங்கேற்புடன் தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் கொத்தணி அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு அங்கமாக கல்குடா பிரதேசத்தில் இருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட 2145 புதிய பயனாளிகளுக்கான மீளாய்வுக் கூட்டங்கள் கடந்த மே மாதம் 26ஆம் திகதி முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் தலைமையில் கல்குடா பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவானவர்களுக்கான உரித்துப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் தலைமையில் மீராவோடை அமீரலி மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் முன்னாள் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரித்துப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் அமிஸ்டீன், முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களான எம்.ரீ. அன்வர், எம்.ஐ. ஹாமித் மெளலவி, எஸ்.ஏ. அன்வர் ஆசிரியர், ஏ.ஜி. அஸீஸுல் றஹீம் ஆசிரியர் மற்றும் ஐ.எல். பதுர்தீன் ஆகியோரும், முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்த்தர்கள், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் அடுத்த கட்ட நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை 03.30 மணிக்கு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது பங்கேற்புடன், பிரதேச அரசியல் பிரதிநிதிகள், முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்த்தர்களின் பிரசன்னத்துடன் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment