பால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகம் செய்தார் அமைச்சர் ஹரிசன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 17, 2019

பால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகம் செய்தார் அமைச்சர் ஹரிசன்

இலங்கையில் பால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நோக்கில் தொலைபேசி இலக்கமொன்றை கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலகங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிசன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

இதற்கமைய, ‘சவிய’ (பலம்) எனும் பெயரில் இயங்கும் இந்த சேவை 6162 எனும் தொலைபேசி இலக்கம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் பால் பண்ணையாளர்களுக்கு, ‘சவிய’ சேவையின் மூலம் உடனடித் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை பால் பண்ணையாளர்களுக்கு பலமாக அமையும் என்பதோடு, உள்ளூர் பால் பண்ணையாளர்களை ஊக்குவிக்க இது உதவுமெனவும் அமைச்சர் பி. ஹரிசன் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு பால்மாக்களை இறக்குமதி செய்ய வருடாந்தம் ரூபா 40,000 மில்லியன் செலவிடப்படுவதாகவும் இப்பணத்தை எமது நாட்டிற்குள்ளேயே சேமிக்கும் பொருட்டு, திரவ நிலை பாலை பிரபலப்படுத்த தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த திட்டத்திற்காக விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் செயற்றிட்டங்கள் தங்குதடையின்றி முன்னெடுக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment