கன்னியா விவகாரம் குறித்து தமிழ் எம்.பிக்களுடன் பேசவுள்ளார் ஜனாதிபதி - அமைச்சர் மனோ தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 17, 2019

கன்னியா விவகாரம் குறித்து தமிழ் எம்.பிக்களுடன் பேசவுள்ளார் ஜனாதிபதி - அமைச்சர் மனோ தெரிவிப்பு

"திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றில் விகாரை கட்டும்படி தொல்பொருளாராட்சித் திணைக்களத்துக்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்புச் செயலாளருக்குத் தான் கூறவில்லை என ஜனாதிபதி என்னிடம் கூறினார். அப்படி எழுதப்பட்டிருந்தால் இதுபற்றி விசாரிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். 

இது தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் தூதுக்குழுவை சந்திக்க என்னிடம் அவர் உடன்பட்டார். இதற்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்படும்."

இவ்வாறு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் இன்று தெரிவித்தார். 

"ஜனாதிபதியுடனான உரையாடலையடுத்து இவ்விவகாரம் பற்றி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமானப் பணிக்கும் கன்னியாவில் இடம் கொடுக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரவை அழைத்து நான் சற்றுமுன் கூறியுள்ளேன்" எனவும் அமைச்சர் மனோ  கணேசன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment