புனித குர்ஆனிலுள்ள விடயங்களை ஆராய்வதற்கு தனியான குழுவொன்றை அமைக்க ஜனாதிபதியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

புனித குர்ஆனிலுள்ள விடயங்களை ஆராய்வதற்கு தனியான குழுவொன்றை அமைக்க ஜனாதிபதியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

வன்முறையைத் தூண்டும் வகையில் புனித குர்ஆனில் உள்ள விடயங்களை கடைப்பிடிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு தனியான குழுவொன்றை அமைக்க ஜனாதிபதியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓமல்பே சோபித்த தேரர் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் அஷ்ஷெய்க் கலாநிதி முஹம்மத் பின் அப்துல்கரீம் அல்லிஸ்ஸா இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:குர்ஆனில் உள்ள சில விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும், இணையத்தளத்திலிருந்து, தான் பெற்றுக்கொண்ட குர்ஆன் பற்றி விளக்கத்தில் எப்பொழுதும் யுத்தத்துக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறன போதனைகளை கடைப்பிடிப்பது பற்றி ஆராய்வதற்கு தனியான குழுவொன்றை ஜனாதிபதியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்டகாலமாக அனுபவித்த பயங்கரவாத யுத்தத்திலிருந்து மீண்ட நிலையில், முஸ்லிம்கள் மாத்திரம் ஏன் தனியானதொன்றை நோக்கிச் செல்கின்றனர். தனியான உணவு, தனியான சட்டம் ஒழுங்கு, தனியான ஆடை என சகலவற்றிலும் தனியானதொன்றை நோக்கிச் செல்லப் பார்க்கின்றனர். ஏன் இவ்வாறு தனியானதொன்றைத் தேடுகின்றனர் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

No comments:

Post a Comment