சீனாவிலிருந்து சிகரெட் இறக்குமதி செய்வதை நிறுத்த அமைச்சரவை இன்று தீர்மானித்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவையில் இடம்பெற்ற விரிவான கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து சிகரெட் இறக்குமதி செய்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமைச்சரவையில் தௌிவுபடுத்தியுள்ளார்.
அதற்கமைய, சீனாவிலிருந்து சிகரெட் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்ததாக சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment