ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களின் முடிவின் பின்னரே தமது முடிவு அமையுமெனக் குழுக்களின் பிரதித் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களும் மக்கள் முடிவெடுத்த பின்புதான் நாங்கள் அந்த முடிவுக்குத் தள்ளப்பட்டோம்.
அதேபோல், தான் அடுத்த ஜனாதிபதி குறித்தும் மக்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள்.
அதன் பின் நாம் சரியான முடிவை எடுக்க முடியும். இப்பொழுது தென்னிலங்கையில் இருக்கின்ற சிங்கள கட்சிகள் யாரை வேட்பாளராக நியமிப்பது என்ற பிரச்சினையில் உள்ளன.
அதன்பின் மக்கள் எடுக்கின்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே எங்களது முடிவுகள் அமையும். பொறுத்திருந்து மக்களுடைய செயற்பாட்டுடன் ஒத்துப்போகின்ற ஒரு முடிவையே நாம் எடுப்போம் என்றார்.
வவுனியா விசேட நிருபர்
No comments:
Post a Comment