தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, July 1, 2019

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரையான ஒரு மணி நேரம் பேருந்து நிலையம் முன்பாக இப் போராட்டம் நடைபெற்றது.

இதன் போது "அரசியற் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தமிழர்களைக் கொல்லாதே, சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளின் மருத்துவத்தில் சிறைச்சாலை நிர்வாகமே அசமந்தம் காட்டாதே" போன்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பருத்தித்துறை விசேட நிருபர்

No comments:

Post a Comment