பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை கைது செய்யச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இரு பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (16) பிற்பகல் 12.30 மணியளவில் தொடங்கொட, பொம்புவல, தித்தவெல்கொடெல்ல பகுதியில் இச்சம்வபம் இடம்பெற்றுள்ளது.
பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை கைது செய்ய தொடங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது, குறித்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸார் அவ்விடத்திலிருந்த மோட்டார் சைக்கிளொன்றை கைப்பற்ற நடவடிக்கை எடுத்தபோது, அவ்விடத்திற்கு வந்த ஒரு சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சசர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதனையடுத்து, உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஒருவரும் சிகிச்சைக்காக, களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment