எச்.எம்.எம்.பர்ஸான்
இலங்கை அதிபர் சேவை தரம் 3 க்கு புதிய அதிபர்களை இணைத்துக் கொள்வதற்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள ஐந்து பேர் சித்தியடைந்துள்ளனர்.
நேற்று (10) வெளியான பெறுபேற்றின் படி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர் எம்.பீ.எம். அன்வர், ஓட்டமாவடி தேசிய பாடசாலை ஆசிரியர் ஏ.பீ. அஸ்மிர், காவத்தமுனை மில்லத் வித்தியாலய ஆசிரியர் ஏ.பீ. சாஜஹான், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய ஆசிரியர் எம். நியாஸ், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை ஆசிரியர் ஏ.எல்.எம். சக்கரிய்யா ஆகியோர்கள் சித்தியடைந்துள்ளனர்.
குறித்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளதோடு. அதில் தெரிவு செய்யப்படுவோர்களுக்கு பாடசாலைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment