தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 11, 2019

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் திருகோணமலையில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் வீட்டின் முன்பாக இன்று (11ஆம் திகதி) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – திருகோணமலையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரரணைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

சுமார் 2 மணித்தியாலங்கள் வரை ஆர்ப்பாட்டம் நீடித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment