விஷம் உடலில் சேர்வதன் மூலம் வைத்தியசாலையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை பல வருடங்களாக ஒரே அளவில் காணப்படுகின்றது.
விஷம் உடலில் கலந்தால் தொலைபேசியின் ஊடாக அழைப்பினை ஏற்படுத்தி வைத்தியர் ஒருவருடன் தொடர்பு கொண்டு அவரது ஆலோசனைகளை அல்லது தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தேசிய நச்சு தொடர்பான மத்திய நிலையத்தின் வைத்தியர் சமந்த லியனகே குறிப்பிட்டுள்ளார்.
இத்தொடர்பினை ஏற்படுத்தக் கூடிய தொலைபேசி இலக்கம் 011 2686143 என்பதாகும் என்பதையும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment