தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் யாழ். அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தொடர்பில் எம்.கே. சிவாஜிலிங்கம் கருத்து தெரிவித்தார்.
அந்த அடிப்படையிலே தான் தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் குழு ஒன்று கூடி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையிலே தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேர் கொண்ட பாராளுமன்றக் குழு என்ன செய்ய வேண்டுமென விவாதித்த பொழுது, ஒருவர் கூட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று சொல்லவில்லை என குறிப்பிட்டார்.
இருந்தாலும் அரசாங்கம் இவ்வாறு எங்களை ஏமாற்றிய காரணத்தால் அரசாங்கத்துக்கு எதிராக அதாவது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமென்ற கருத்து பலமாக இருந்தாலும் கூட இவ்வளவு காலமாக அரசுக்கு ஆதரவைக் கொடுத்துவிட்டு தற்போது உடனடியாக எதிர்ப்பைக் காட்டுவது இன்னும் ஒரு சில மாதங்களிலே ஏதாவது சாதித்து இருக்க முடியுமா என்று எண்ணுபவர்களுக்கும் இன்னொரு விதத்திலே நாங்கள் உங்களை ஆதரிக்க மறுக்கின்றோம் உங்களுக்கு பகிரங்க எச்சரிக்கை என்று எண்ணும் விதத்திலே இந்த வாக்கெடுப்பிலே கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டுமென கூட்டமைப்பில் இருக்கக் கூடிய ரெலோவின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஒட்டுமொத்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment