மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இன்று (11) மாலை இடம்பெறவுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாதப் பிரதிவாதங்கள் நேற்று (10) ஆரம்பிக்கப்பட்டு, இன்றையதினமும் நடைபெறவுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்திற்கு பின்னர், இன்று மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
இப்பிரேரணையை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு முன்னரும் பின்னரும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அற்றுப்போயுள்ளதாகத் தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணி இந்தப் பிரேரணையை தாக்கல் செய்துள்ளது.
No comments:
Post a Comment