பொலிஸ்மா அதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Monday, July 1, 2019

பொலிஸ்மா அதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டீ. லிவேரா பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இவர்கள் இருவரும் கொலைக் குற்ற சந்தேகநபர்களாக கருதுவதற்கான ஆதாரங்கள் உள்ளன என்பதனாலேயே சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவமானது தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்தியப் புலனாய்வுப் பிரிவு ஏப்ரல் 4 ஆம் திகதியன்றே எச்சரிக்கை விடுத்தும், பாதுகாப்பு பிரதானிகள் அதனை அலட்சிப்படுத்தியமையாலேயே இவ்வாறான அழிவு இடம்பெற்றுள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையிலேயே, கொலைகுற்ற சந்தேநகபர்களாக கருதுவதற்கான ஆதாரங்கள் உள்ளமையினால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டே ஆகியோரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார்.

எனினும், இராஜினாமா செய்ய முடியாது என மறுப்புத் தெரிவித்திருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித, கட்டாய விடுமுறைக்கு உட்படுத்தப்பட்டார். இதற்கு எதிராக அவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment