பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பிலும் மாகந்துரே மதுஷிடம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிணங்க, அடுத்த இரண்டு வாரங்களுக்கு மதுஷிடம் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு, நாட்டிற்கு வருகை தந்த நிலையில் மாகந்துரே மதுஷ் பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment