கடல் கற்பாறை மீது ஏறி செல்பி எடுத்த நால்வரில் இருவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளனர்.
இன்று (16) பிற்பகல் 5.00 மணியளவில் காலி, உணவட்டுன, ரூமஸ்ஸல பிரதேசத்திலுள்ள கடற்கரையிலுள்ள கற்பாறையின் மீது நின்று செல்பி (Selfie) புகைப்படம் எடுக்க முயற்சி செய்த நால்வர் அலையில் அடிக்கப்பட்டு கடலில் வீழ்ந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களில் இருவர் கற்பாறைகளை பிடித்து கரைசேர்ந்துள்ளதோடு மற்றைய இருவரும் அலையில் அள்ளுய்டு காணாமல் போயுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனவர்கள், 20, 21 வயதுடைய தெலிகட, கினிமெல்லகஹ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் இவ்வருடம் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருந்தவர்கள் ஆவர்.
குறித்த இடம் நீராடுவதற்கான பகுதி அல்ல என்பதோடு, பாரிய அலைகள் எழும் பகுதி இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் ஹபராதுவ பொலிசார் மற்றும் கடற்படையினர் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment