ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை இன்று முதல் அமுலாகும் வகையில் 7 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய விலை தொடர்பில் நாட்டின் அனைத்து முகவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், கோதுமை மா மீது விதிக்கப்படும் வரிக்கமைய ஒரு கிலோ மாவின் விலை 8 ரூபா 50 சதத்தினால் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமது தயாரிப்பு பொருட்களின் விலைகள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரை தமக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படவில்லையென இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment