கையடக்க தொலைபேசி ஊடாக ஹெரோயின் விற்பனை செய்தவர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2019

கையடக்க தொலைபேசி ஊடாக ஹெரோயின் விற்பனை செய்தவர் கைது

பதுளை பிரதேசத்தில் போதைப்பொருள் பைக்கற்றுகளை வீதி ஓர கால்வாய், மின்சார கம்பங்களுக்கு அருகில் வீசி சென்ற ஒருவரை பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று (10) கைது செய்துள்ளனர். 

குறித்த நபர் கையடக்க தொலைபேசி ஊடான பணப்பரிமாற்றத்தின் மூலம் போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளார். 

அதாவது, மேற்குறித்தவாறு பொது இடங்களில் போதைப்பொருளை வீசி கொள்வனவாளர்களுக்கு தொலைபேசி மூலம் இடத்தை குறிப்பிட்டு வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். 

அவர், பதுளை, ஹாலிஎல, உடுவர ஆகிய இடங்களில் போதைப்பொருளை விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உடுவர பகுதியில் வசிக்கும் 30 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

நீண்ட நாட்களாக மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 60 ஹெரோயின் பக்கட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைபொருளின் பெறுமதி 2 இலட்சம் ரூபாய் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர். 

ஊவா பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் மா அதிபர் ஜெகத் பலிககாரவின் ஆலோசனைக்கு அமைய பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

கிரிஷாந்தன்

No comments:

Post a Comment