முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இன்று (02) அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக, இன்று (02) அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நாரஹென்பிட்டியிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவரும் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக, அவரையும் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment