பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த சிசிர குமார அபேசேகரவின் புதல்வரின் தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு (29ஆம் திகதி) 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினரின் புதல்வர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment