ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 5 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய கடும்போக்குவாதத்தை தூண்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனது மாமாவை பிணையில் விடுவிக்குமாறு கோரி ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க இந்நபர் முயன்றுள்ளார்.
5 இலட்சம் ரூபாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்து, இரண்டரை இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு சென்ற போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
ஹொரவப்பொத்தானையில் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டாளர் என கூறப்படும் அப்துல் மஜிட் மொஹமட் நியாஸ் என்ற நபரின் மருமகனே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment