கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் காணப்பட்ட எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 4, 2019

கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் காணப்பட்ட எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் காணப்பட்ட எண்ணெய் கழிவுகள் தற்போது முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தற்போது குறித்த கடல் கரையோர பகுதிகளை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டர்னி பிரதீப் குமார கூறினார். 

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் எண்ணெய் கழிவுகள் ஒதுங்கியிருந்தன. 

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அவதானமாக செயல்படுமாறு கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது. 

கடற்படை மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன இணைந்து நேற்று மற்றும் இன்று காலை வரை அந்தக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment