சோபா உடன்பாட்டினால் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படாது : அமெரிக்கா - News View

About Us

About Us

Breaking

Sunday, June 30, 2019

சோபா உடன்பாட்டினால் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படாது : அமெரிக்கா

இலங்கை - அமெரிக்காவுக்கு இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கைகளினால் இலங்கை இறைமைக்கு எந்ததொரு பாதிப்பும் ஏற்படாதென அமெரிக்க குறிப்பிட்டுள்ளது.

சோபா உடன்பாட்டினால் இலங்கையின் இறைமை மற்றும் சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளமையினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமெரிக்க தூதரகப் பேச்சாளர் நான்சி வான்ஹோர்ன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, பாதுகாப்பு உடன்படிக்கைகளை காரணம் காட்டி, அமெரிக்க படைகள் தளங்களை அமைக்கவோ, போர்த் தளபாடங்களை இலங்கையில் நிறுவதற்கோ ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம்.

மேலும் தனது எல்லைக்குள்ளேயும், பிராந்திய கடல் மற்றும் வான்வெளியிலும், அமெரிக்க படையினரின் கப்பல்கள், விமானங்கள் நுழைவதற்கு அல்லது வெளியேறுவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கும், மறுப்பதற்குமான அனைத்து இறையாண்மையை இலங்கை எப்போதும் கொண்டிருக்கும்.

இலங்கைக்கு பயிற்சிகள் மற்றும் அதிகாரபூர்வ கடமைகளுக்காக வருகை தரும் அமெரிக்க படையினர் மற்றும் சிவில் பணியாளர்கள் குறித்து அமெரிக்கா - இலங்கை ஆகிய நாடுகன் 1995ஆம் ஆண்டு உடன்பாடு ஒன்றை செய்திருந்தன.

குறித்த உடன்பாட்டினை புதுப்பிப்பதற்காகவும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள செயல்முறைகளை நெறிப்படுத்தவும் தீர்மானித்துள்ளோம். இந்த உடன்படிக்கையின் ஊடாக இரு நாடுகளின் உறவுகள் மேலும் வலுவடையும்” என நான்சி வான்ஹோர்ன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment