உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரச மேல் மட்டத்தில் ஆராயப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடந்த சந்திப்பில் இது பற்றி பேசியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து நீண்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஸ்திரமான ஆட்சியொன்றின் தேவை உள்ளதால் தேர்தலுக்குச் செல்வதே நல்லதெனப் பல தரப்பிலும் கருதப்படுவதால் இவ்விடயம் ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகின்றது.
விசேட பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்றுவதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்லலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
Charles Ariyakumar Jaseeharan
No comments:
Post a Comment