ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன்! - மஹிந்த தரப்புக்கும் ஆதரவில்லை, மைத்திரி தடாலடி அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 4, 2019

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன்! - மஹிந்த தரப்புக்கும் ஆதரவில்லை, மைத்திரி தடாலடி அறிவிப்பு

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அமைச்சரவைக் கூட்டம் நேற்றுக் காலை நடந்து முடிந்த பின்னர் சில அமைச்சர்களுடன் தனிப்பட்ட ரீதியில் மனம் விட்டுப் பேசினார் ஜனாதிபதி மைத்திரி. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

"இனித் தேர்தலில் போட்டியிடமாட்டேன். அதேசமயம் மஹிந்த தரப்புக்கும் ஆதரவளிக்கமாட்டேன். ஐக்கிய தேசிய முன்னணி புதிய வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் - கிரமமான அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்தால் அதற்கு ஆதரவளிப்பது பற்றி பரிசீலிப்பேன். இல்லாவிட்டால் மத்தியஸ்தம் வகிப்பேன்" - என்றும் அங்கு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Charles Ariyakumar Jaseeharan

No comments:

Post a Comment