திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 02 கிராமும் 800 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை இன்று (05) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கந்தளாயைச் சேர்ந்த 32 மற்றும் 41 வயதுடைய இருவரையே கைது செய்ததாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும், ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சோதனை மேற்கொண்டு இவர்களைக் கைது செய்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எப்.முபாரக் -கந்தளாய்
No comments:
Post a Comment