27 மீன்பிடிப் படகுகள் எரிந்து சாம்பலான விவகாரம் : இதன் பிறகு காப்புறுதி இல்லாத படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் இல்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, June 29, 2019

27 மீன்பிடிப் படகுகள் எரிந்து சாம்பலான விவகாரம் : இதன் பிறகு காப்புறுதி இல்லாத படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் இல்லை

கடற்றொழிலுக்காக கடலுக்கு செல்லும் மீன்பிடி படகுகள் அனைத்தையும் காப்புறுதி செய்யப்படுவதை கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி தெரிவித்தார். 

அவ்வாறு இல்லாத படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டாம் என்று கடற்றொழில் திணைக்களத்திற்கு உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

அம்பலந்தொட்டை (ஹம்பாந்தோட்டை மாவட்டம்) குருபொகுண மீனவ சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற (28) கலந்துரையாடலில் வைத்து இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். 
இராஜாங்க அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள பணிப்பாளர் நிஹால் பாலித, உதவிப் பணிப்பாளர், ஹம்பாந்தோட்டை முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 

இதன் போது மீன்பிடி தொழில்நுட்பவியலாளர்கள் கூறியது, கடந்த 26 ஆம் திகதி எரிந்து சாம்பலான படகுகளுக்கு காப்புறுதித் தொகை பெறுவதில் பாரிய சிக்கல் உள்ளமையாகும்.

இதன் போது இராஜாங்க அமைச்சருக்கு தெரிய வந்தது, பல படகுகள் எந்த விதத்திலும் காப்புறுதி செய்யப்பட்டிருக்கவில்லை என்ற பிரச்சினை ஆகும். இதனால் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள், குடும்ப நிலைமைகள் அங்கு பெண் மீனவர்களால் விளக்கப்பட்டது. 
நிலத்திலும், நீரிலும் பகுதியளவில் சேதமடையும் படகுகளுக்கு எந்தவொரு காப்புறுதித் தொகையும் கிடைப்பதில்லை என்றும் அங்கு கூறப்பட்டது. 

இதன் போது முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கே காப்புறுதித் தொகை வழங்கப்படுவதை அதே போன்று பகுதியளவில் சேதமடைந்த படகுகளுக்கும் காப்புறுதித் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடற்றொழில் திணைக்களத்திற்கு இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி பணிப்புரை வழங்கினார்.

கடந்த 26 ஆம் திகதி அதிகாலை ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள கலமடியாவ மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த 27 படகுகள் தீப்பிடித்து எரிந்தமை குறிப்பிடத்தக்கது.

ரிஹ்மி ஹக்கீம்

No comments:

Post a Comment