முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 3, 2019

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை ஒன்று நேற்று எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அவ்வறிக்கை எதிர்க் கட்சித் தலைவரினால் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக்க, முன்னாள் கடற்படைத் தளபதி எட்மிரல் வசந்த கரன்னாகொட, எட்மிரல் ஜயநாத் கொழம்பகே, முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான மஹிந்த பாலசூரிய, சந்ரா பெர்ணான்டோ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கும் மேற்படி முக்கியஸ்தர்களுக்குமிடையில் சிறு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

No comments:

Post a Comment