ரஜரட்ட, ஶ்ரீ ஐயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 11, 2019

ரஜரட்ட, ஶ்ரீ ஐயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் (13) ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய, நாளை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையான காலப்பகுதிக்குள் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிக்கு வருகை தர வேண்டும் என துணைவேந்தர் கலாநிதி பி.ஏ. கருணாரத்ன தெரிவித்தார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி மருத்துவ பீடத்தின் ஏனைய வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 14 ஆம் திகதி 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையான காலப்பகுதிக்குள் அம்மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிக்கு வருகை தர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும் என துணைவேந்தர் கலாநிதி பி.ஏ. கருணாரத்ன குறிப்பிட்டார்.

இதேவேளை, ஶ்ரீ ஐயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர் பீடம், முகாமைத்துவ பீடம் மற்றும் வர்த்தக பீடம் ஆகியவற்றை தவிர்ந்த ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment