மீராவோடையில் கம்பெரலிய வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2019

மீராவோடையில் கம்பெரலிய வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு

எச்.எம்.எம்.பர்ஸான்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மேற்கு மற்றும் மீராவோடை கிழக்கு ஆகிய பகுதிகளின் கம்பெரிலிய வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (1) புதன்கிழமை இடம்பெற்றது.

விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் மூலம் குறித்த பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்ட இவ் வேலைத்திட்டத்தில் குறித்த பகுதிகளில் காணப்படும் மீராவோடை மேற்கு பகுதியில் டார்ஸ்போமர் வீதி கொங்ரீட் வீதியுடன் வடிகானும், மீராவோடை பொதுச் சந்தை கட்டிட வேலைகளைப் பூர்த்தி செய்யப்படுவதோடும் மீராவோடை கிழக்கு பகுதியிலுள்ள றிழா பள்ளிவாயலை மேம்படுத்தல், வடிகான்களுக்கு மூடிகள் பொருத்தல் மற்றும் உதுமான் பாலர் பாடசாலையை சிறுவர் பூங்காவுடன் மேம்படுத்தல், சாலிஹீன் பள்ளிவாயலை மேம்படுத்தல் ஆகிய வேலைத்திட்டங்கள் ஆரப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் புதல்வர்களான வைத்தியர் அப்தாப் அலி, அஸாஹிர் அலி மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் அமைச்சரின் இணைப்பாளரும் வட்டாரக் குழுத் தலைவருமான ஐ.எம்.றிஸ்வின், மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஏ.எல்.அலியார் ஹாஜியார் மற்றும் வட்டாரக் குழு உறுப்பினர்கள் பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment