கிளிநொச்சி, கிராஞ்சி பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது.
கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி பகுதியிலேயே இன்று (02) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிராஞ்சி சிவபுரத்தைச் சேர்ந்த சிவநேசன் சுபாசினி (32) எனும் மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், அவரது ஒரு வயதுடைய பெண் குழந்தை காயமடைந்துள்ளது.
வீட்டுக் காணிக்குள் புகுந்த யானை, குறித்த பெண்ணையும் குழந்தையையும் தாக்கியுள்ளது.
இவர்கள் இருவரும் வேரவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குறித்த பெண் மரணமடைந்துள்ளார்.
முருகையா தமிழ்செல்வன்
No comments:
Post a Comment