சீனாவில் உய்குர் மற்றும் ஏனைய துருக் முஸ்லிம்களின் அன்றாட நடவடிக்கைகளைச் செயலிவழி அதிகாரிகள் கண்காணித்து வருவதாக, மனித உரிமைக் கண்காணிப்புக் குழு ஒன்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
பெரிய அளவில் மக்களைக் கண்காணிக்கும் வகையில் அந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சின்ஜியாங் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் முறையான நடவடிக்கைகளையும் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளாக வகைப்படுத்த, சீனா அந்தச் செயலியைப் பயன்படுத்துவதாகக் குறைகூறல் எழுந்துள்ளது.
அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளவும், அவர்களைத் தடுத்து வைக்கவும் சீனா முனைவதாகக் கூறப்படுகிறது.
பக்கத்து வீட்டாருடன் தொடர்பு வைத்துக் கொள்ளாதவர்கள், வீட்டின் முன்கதவை அதிகம் பயன்படுத்தாதவர்கள், கைபேசியை பயன்படுத்தாதவர்கள் உள்ளிட்டோரை சின்ஜியாங் மாநில அதிகாரிகள் அணுக்கமாய்க் கண்காணிப்பதாக நம்பப்படுகிறது.
இவ்வாறு 36 வகையான நபர்களை இலக்கு வைத்து சீன நிர்வாகம் இந்த கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உய்குர் முஸ்லிம்கள் சீனாவில் மோசமான பாகுபாட்டுக்கு முகம்கொடுத்து வருவதாக உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.
No comments:
Post a Comment