பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தமது பாதுகாப்புச் செயலாளர் கெவின் வில்லியம்சனைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
பிரிட்டனின் 5ஜி தொழில்நுட்பக் கட்டமைப்பு தொடர்பில், ஹுவாவி நிறுவனத்தின் பங்கு பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த விபரங்கள் வெளியே கசிந்ததற்கு அவரே காரணமெனத் தாம் நம்புவதாகத் மே குறிப்பிட்டுள்ளார்.
அதற்குரிய வலுவான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், வில்லியம்சன் அதனை மறுத்துள்ளார்.
முக்கியமான விவாதத்தின் விபரங்கள் வெளியே கசிந்தது தொடர்பில் தாம் புலனாய்வுக்கு ஆட்படத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.
பிரிட்டனின் 5ஜி வலையமைப்பை கட்டியெழுப்புவதற்கான திட்டத்திற்கு சீனாவின் ஹுவாவி நிறுவனத்தின் உதவியை நாடுவது குறித்த திட்டமே அம்பலமாகியுள்ளது.
பாதுகாப்பை காரணம் காட்டி ஹுவாவியிடம் இருந்து 5ஜி கட்டமைப்பை பெறுவதை தவிர்க்கும்படி அமெரிக்கா தனது கூட்டணி நாடுகளுக்கு அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீன அரசுடன் தமக்கு இருக்கும் குற்றச்சாட்டை நிராகரிக்கு ஹுவாவி உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறப்படுவதையும் மறுக்கிறது.
No comments:
Post a Comment