நாட்டிலுள்ள அனைத்து வணக்கஸ்தலங்கள், பாடசாலைகளுக்கு முப்படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர நேற்று தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலைகள், வணக்கஸ்தலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முபப்டைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த பணிப்புரை தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு டுவிட்டர் வலைத்தளமூடாக செய்தி வௌியிட்டுள்ளது.
No comments:
Post a Comment