தேசிய கல்வி ஆணைக்குழுவின் தொழிநுட்ப மற்றும் தொழிற்கல்வி பற்றிய தேசிய கொள்கை பிரகடனம் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் டப்ளியு. ஐ.சிறிவீர அக்கொள்கை பிரகடனத்தினை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில், அதன் உப தலைவர் (கொள்கைகள்) கலாநிதி பி.வி. குணவர்தன, உப தலைவர் (திட்டமிடல்) கலாநிதி பீ.ஏ. பியசிறி மற்றும் மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தயந்த விஜேசேகர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment