குண்டு வெடிப்பில் சீன விஞ்ஞானிகள் நால்வர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2019

குண்டு வெடிப்பில் சீன விஞ்ஞானிகள் நால்வர் உயிரிழப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களின்போது, சீனாவைச் சேர்ந்த 4 விஞ்ஞானிகள் உயிரிழந்துள்ளதாக, கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

26, 30, 35, 38 வயதுடைய கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான கூட்டு விஞ்ஞான ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் கொழும்பிலுள்ள கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு 18 ஆம் 19 ஆம் திகதிகளில் இவர்கள் வந்திருந்தனர். 

இந்நிலையில், ஏப்ரல் 21 ஆம் திகதி குறித்த ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில், இவர்கள் நால்வரும் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாகவும், கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது. 

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள சீனத் தூதரகம், குண்டு வெடிப்பில் உயிரிழந்த 4 விஞ்ஞானிகளுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி 3 தேவாலயங்களிலும் 3 ஹோட்டல்களிலும் ஏனைய இடங்களான தெஹிவளை மற்றும் தெமட்டகொடையிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 42 வெளிநாட்டுப் பிரஜைகள் அடங்குவதாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

No comments:

Post a Comment