தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (நைற்றா) வுடன் இணைந்து வேலைத் திட்டங்களை விரிவுபடுத்தும் நோக்கில் பிரண்டிகஸ் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவர் நஸிர் அஹமட்டுக்கும் பிரண்டிக்ஸ் நிறவனத்தின் விசேட திட்டப் பணிப்பாளர் பொது மனிதவள முகாமையாளர் ரவீன் ஜயசுந்தர ஆகியோருக்கும் இடையில் இச்சந்திப்பு கடந்த புதனன்று நைற்றா அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது தற்போது நைற்றா மூலமாக மேற்கொள்ளப்படும் செயல் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவுவதற்கும், பிரண்டிக்ஸ் நிறுவனத்தினூடாக நைற்றா மாணவர்களைப் பயிற்றுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment