எஸ்.எம்.எம். முர்ஷித்
பொது மக்களின் ஒத்துழைப்பால்தான் நாட்டிற்கு எதிரான சதிகளை முறியடிக்க முடியும் அதனால் பொது மக்களின் உதவி எங்களுக்கு கட்டாயம் தேவை என்று வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை பள்ளிவாயல்கள் நிருவாகிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கான கூட்டம் நேற்று (புதன்கிழமை) 01.05.2019 மாலை பிறைந்துரைச்சேனை நூரிய்யா பள்ளிவாயலில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களும் ஆயுதங்களும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் உதவியவர்களில் அதிகமானவர்கள் முஸ்லீம்கள்தான்.
இந்த குண்டு வெடிப்பு செயலை முஸ்லீம்கள் அங்கீகரிக்கவில்லை முஸ்லீம்களில் சிறு குழுவொன்று இவ்வாறான செயல்களில் ஈடுபட்டாலும் முஸ்லீம் சமுகம் அரசாங்கத்திற்கு ஆதரவாகத்தான் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் நாட்டில் நிம்மதி ஏற்பட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு நாட்டு மகனும் பிராத்திக்கின்றான்.
பொய் பிரச்சாரங்களுக்கு எவரும் ஏமாற்றமடைய வேண்டாம் இணையத்தளங்களில் ஊடாகவும் வாய்பேச்சாலும் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் அவ்வாரனவர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு தெரியப்படுத்தவும்.
ஒவ்வொருவரும் விழிப்பாக இருங்கள் நமது பிரதேசத்தில் சந்தேக நபர்கள் எவரும் நடமாடினாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் பொதிகள் தென்பட்டாலோ கிராம சேவை உத்தியோகத்தருக்கோ அல்லது பொலிஸாருக்கோ உடன் தெரியப்படுத்துங்கள் என்றும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் ஆலோசனை சபைத் தலைவர் போதகர் கே.சுனில், கிராம சேவை உத்தியோகத்தர் எச்.எம். அமானுல்லாஹ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.எம். நூர்தீன், நூரிய்யா பள்ளிவாயல் தலைவர் எம். பதுர்தீன், முஹைதீன் தைக்கா பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர் ஏ.ஜே.எம். முயிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment