பேஸ்புக்கில் முக்கிய மாற்றங்கள் : தலைவர் மார்க் சுகர்பர்க் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2019

பேஸ்புக்கில் முக்கிய மாற்றங்கள் : தலைவர் மார்க் சுகர்பர்க் அறிவிப்பு

பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தனிநபர் தகவல்கள் கையாளப்படும் விதத்தில் மாற்றங்களை விரைவில் ஏற்படுத்தப்போவதாக பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சுகர்பர்க் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான சமூக ஊடகங்களில் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கையாளப்படும் விதம் குறித்துப் பரவலான குறைகூறல்கள் எழுந்துள்ளன.

அதனைக் கருத்தில் கொண்டு பேஸ்புக் அதன் சமூக ஊடகங்களை மாற்றியமைப்பதாக சுகர்பர்க் தெரிவித்துள்ளார்.

இதன்படி பேஸ்புக் இன் வட்ஸ்அப் வழி அனுப்பப்படும் தகவல்கள், நிறுவனம் பார்க்க இயலாதபடி மாற்றியமைக்கப்படும். அது இன்ஸ்டாகிராம் உடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும்.

இன்ஸ்டாகிராம் பதிவுக்குத் தெரிவிக்கப்பட்ட விருப்பங்களின் எண்ணிக்கையை அந்தப் பதிவுக்குச் சொந்தக்காரரால் மட்டும்தான் பார்க்கமுடியும்.

தற்காலிகமாக மட்டும் பேஸ்புக் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள கூடுதல் வழிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இதனிடையே ‘டார்க் மோட்’ வசதி உள்ளிட்ட பல மாறுதல்களுடன் பேஸ்புக் தனது வடிவத்தை மாற்றவுள்ளது.

‘எப்.பி.5’ வெர்சன் என்ற பெயரில் பேஸ்புக் புதிய வடிவம் பெறவுள்ளது. இந்த புதிய அப்டேட்டுகள் பயன்படுத்த எளிமையாகவும், விரைவாகவும், அதிவேகமானதாகவும் இருக்குமென்றும், இது பல்வேறு பயன்பாட்டு அம்சங்களை கொண்டது என்றும் சுகர்பர்க் மேலும் தெரிவித்துள்ளார்.

கணினிக்கான புதிய வடிவம் அடுத்த சில மாதங்களில் கிடைக்கப்பெறும். அனைவரும் எதிர்பார்க்கும் ‘டார்க் மோட்’ வசதியும் இந்த அப்டேட்டில் கிடைக்கும். கணினியில் பயன்படுத்தும் பேஸ்புக்குக்கு ‘டார்க் மோட்’ வசதி முழுவதுமாக கிடைக்குமென்றும், கைபேசியில் பயன்படுத்தும் பேஸ்புக்குக்கு முதலில் வீடியோவுக்கு மட்டும் ‘டார்க் மோட்’ வசதி கொடுக்கப்பட்டு பின்னர் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கின் புதிய வடிவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பலரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். டார்க் மோட் வசதிக்காக காத்திருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக், 2008க்கு பின்னர் விஸ்வரூபம் எடுத்தது. பயனாளர்களின் மனநிலைக்கு ஏற்பவும், பயன்படுத்த எளிதாகவும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் மூலம் பேஸ்புக் புதுப்பொலிவுடனே இருந்து வருகிறது. பல அப்டேட்டுகள் வந்தாலும் பேஸ்புக் தனது வடிவத்தில் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வரவில்லை.

No comments:

Post a Comment