சஹ்ரானின் சகோதரி கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2019

சஹ்ரானின் சகோதரி கைது

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவரும் ஐ.எஸ் தீவிரவாதியுமான முஹமட் சஹ்ரான் காசீமின் சகோதரி இன்று மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட் டார்.

புதிய காத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் உள்ள அவரது வீட்டில் இருந்தே இவர் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

முஹமட் சஹ்ரான் காசீமின் சகோதரியான முகமது காசீம் மதனியா – (25வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் வீட்டில் இருந்து 20 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முஹமட் சஹ்ரான் காசீமின் குடும்ப உறுப்பினர்கள் சாய்ந்தமருதில் நடந்த மோதலில் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் காத்தான்குடியிலிருந்த ஒரு சகோதரியை படையினர் இன்று கைது செய்தனர். அத்தோடு இவரின் கணவரான மொஹமட் நியாஸ் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரால் கடந்த மாதம் 29 திகதி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரிடமும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய் வுப்பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment