முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாங்குளம் பகுதியில் வீசிய சுழல் காற்றினால், 22 வீடுகள் சேதமடைந்துள்ளதாக, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன
குறித்த பகுதியில் நேற்று (10) மாலை மழை பெய்துகொண்டிருந்த வேளையில் திடீரென சுழல் காற்று வீசியுள்ளது. இதன்போது, இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, இருபது வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, அத்த கவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மாங்குளம் பகுதியிலுள்ள சந்தையின் கூரையும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், அத்த கவல்கள் தெரிவிக்கின்றன.
சேதமடைந்த வீடுகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் இ ரமேஷ், மாங்குளம் பகுதி கிராம உத்தியோகத்தர் தனபால்ராஜ், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் மு.முகுந்தகஜன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
சண்முகம் தவசீலன்
No comments:
Post a Comment