வவுணதீவு பொலிஸார் கொலை தொடர்பில் கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் - அமைச்சர் மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2019

வவுணதீவு பொலிஸார் கொலை தொடர்பில் கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் - அமைச்சர் மனோ கணேசன்

கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அமைச்சர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.

தற்போது கிடைக்கப் பெற்றுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில், பொலிசாரை கொலை செய்தது தேசிய தெளஹீத் ஜமாஅத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இவ்விடயத்தில் அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

அதனையடுத்து அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ் மா அதிபருக்கும், சட்ட மா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக அமைச்சர் மனோ கணேசனிடம், ஜனாதிபதி சற்று முன் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் அஜந்தனின் மனைவியான செல்வராணி ராசகுமாரனுக்கு அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment