பிளாஸ்டிக் சக்கரம் - கடற்படையுடன் கைகோர்த்த ஜோன் கீல்ஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, April 1, 2019

பிளாஸ்டிக் சக்கரம் - கடற்படையுடன் கைகோர்த்த ஜோன் கீல்ஸ்

மீள்சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வொன்றை வழங்குவதற்காக பிளாஸ்டிக் சக்கரம் இலங்கை கடற்படையுடன் இணைந்து முன்னோடிக் கருத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. பிளாஸ்டிக் சக்கரம், இலங்கை கடற்படையின் மீள்சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி பூச்சாடிகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்ற பெறுமதி சேர்பொருட்களை தயாரிப்பதற்கு முன்மாதிரி செயற்பாடுகளின் அபிவிருத்தி மற்றும் பயிற்சிக்கு பங்களிப்பை வழங்குகின்றது. அத்துடன், இது தன்னையே தக்கவைத்துக்கொள்ளும் நோக்கம் கொண்டது. 

இந்தக் கருத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் திலானி அழகரத்னம் - ஜோன் கீல்ஸ் குழுமம் தலைவர் - மனிதவளங்கள், சட்டம், கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு, நிலைத்திருத்தல் மற்றும் இலங்கைக் கடற்படையின் தளபதி, துணை அட்மிரல் கே.கே.வி.பி.எச் டி சில்வா ஆகியோரால் கைச்சாத்திடப்பட்டது. 

இந்த தொழில்நுட்பம் இலங்கை கடற்படையின் கடல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினால் அபிவிருத்தி செய்யப்பட்டது. இங்குள்ள உருக்கும் அறை மற்றும் வடிவமைத்தல் அறைகள் மீள்சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளை உருக்கி, செய்து வைக்கப்பட்டுள்ள அச்சுக்களைப் பயன்படுத்தி பல்வேறு வடிவங்களில் பொருட்களைச் செய்வதற்கு அனுமதிக்கின்றது. 

இந்தக் கருத்திட்டத்தின் ஆரம்பக் கட்டம், களனி கங்கையின் கழிமுகத்திலும் காக்கைதீவுக் கடற்கரையிலும் பெருந்தொகையான பிளாஸ்டிக் கழிவுகள் அவதானிக்கப்படுவதனால், காக்கைதீவில் உள்ள கடற்படைமுகாமில் தொடங்கப்படுகின்றது. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை கடற்படையின் அங்கத்தவர்களினால் ஒழுங்குசெய்யப்பட்ட வாராந்த கடற்கரைசுத்தமாக்கல் செயற்பாடின் ஊடாகசேகரிக்கப்படுகிறது. 

பிளாஸ்டிக் சக்கரம் இந்த செயன்முறையை மேம்படுத்தவதற்கு அவசியமான உபகரணங்களையும், அத்துடன் இயந்திரங்களை இயக்கும் நபருக்கு அவசியமான பாதுகாப்புகியர்களையும் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. இந்த முன்மாதிரிக் கருத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டால், குறிப்பிட்டளவு மீள்சுழற்சி செய்யப்படாத பிளாஸ்டிக் கழிவுகள் சேரும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இக்கருத்திட்டத்தை விரிவாக்க முடியும். 

இந்த வைபவத்தில் ரியர்அட்மிரல் என்.பி.எஸ் ஆட்டிகல– பணிப்பாளர் நாயகம் (தொழிற்பாடு), இலங்கை கடற்படை, நிஸ்ரீன் ரஹமன்ஜீ – உப தலைவர் ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் புத்திக்க முத்துகுமாரண, வரி மற்றும் சமூகதொழில் முனைவோர் திட்டத்தின் தலைவர்என்பவர்கள் வருகை தந்திருந்தனர்.

No comments:

Post a Comment