முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 2, 2019

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மே மாதம் 04ம் திகதி விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று (02) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 

இதன்போது பிரதிவாதிக்கு எதிராக திருத்தப்பட்ட முறைப்பாட்டை தாக்கல் செய்வதற்கு திகதி வழங்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. 

அதன்படி வழக்கை மே மாதம் 04ம் திகதி விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் முறைப்பாட்டை முன்வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டார். 

குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பிரதித்தலைவர் என்ற பதவியை உருவாக்கி அந்தப் பதவிக்கு நெருங்கிய ஒருவரை நியமித்து சம்பளமாக சுமார் 33 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment