இரண்டு கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் மற்றும் துப்பாக்கியுடன் பாதாள உலகக் குழுவை சேர்ந்த பிரபல தலைவரான சொத்தி உபாலி என்பவரின் மகன் மொரட்டுமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபரை மொரட்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment