திருகோணமலை, கல்மெட்டியாவ 98 ஆம் கட்டை சந்தியில் பட்டா சிறிய லொறி ஒன்றும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பட்டா லொறியில் பயணித்த இருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் மற்றும் தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (30) காலை 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மெட்டியாவ சந்தியிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தானை பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தானை பகுதியிலிருந்து திருகோணமலை பகுதிக்கு சென்ற சிறிய ரக பட்டா லொறியும் திருகோணமலையில் இருந்து கந்தளாய் பகுதிக்குச் சென்ற டிப்பர் வாகனமுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துக்குள்ளானோர் வியாபார நோக்கத்திற்காக திருகோணமலைக்குச் செல்லும் போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதிக வேகமே விபத்துக்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை நிருபர் பாருக்
No comments:
Post a Comment